வழக்கறிஞர் மோகன்தாஸுக்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 4 மாதம் சிறை தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. High Court
வழக்கறிஞர் மோகன்தாஸ், சென்னை சூளைமேட்டில் விக்னேஷ் என்பவருக்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வந்தார். ஆனால் மோகன்தாஸ் வீட்டை காலி செய்ய மறுத்தார். இதனால் சென்னை உயர்நீதிமன்றத்தில் விக்னேஷ் வழக்கு தொடர்ந்தார்.
இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றமும், மோகன்தாஸ் வீட்டை காலி செய்ய உத்தரவிட்டது. ஆனாலும் நீதிமன்ற உத்தரவை மோகன்தாஸ் மதிக்கவில்லை என மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டார் விக்னேஷ். இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் மோகன்தாஸுக்கு 4 மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. மோகன்தாஸை கைது செய்யும் பிடிவாரண்ட் உத்தரவை பிறபிக்க பதிவாளருக்கும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன் மோகன்தாஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழகம்- புதுச்சேரி பார் கவுன்சிலுக்கும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தால் 4 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்ட வழக்கறிஞர் மோகன்தாஸ் பாஜகவைச் சேர்ந்தவர் என்கின்றன ஊடகச் செய்திகள்.
