நாம் தமிழர் கட்சிக்கு உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்!

Published On:

| By Mathi

Naam Tamilar Katchi

சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சிக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. Naam Tamilar Katchi

சிவகங்கை மடப்புரம் அஜித்குமார், போலீசார் தாக்குதலில் உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய 5 போலீசார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது. உயிரிழந்த அஜித்குமாரின் தம்பி நவீன்குமாருக்ககு அரசுப் பணி வழங்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த நிலையில் அஜித்குமார் மரணத்துக்கு நீதி கேட்டு சீமான் தலைமையில் ஜூலை 8-ந் தேதி போராட்டம் நடத்த நாம் தமிழர் கட்சி போலீசாரிடம் அனுமதி கேட்டது. ஆனால் போலீசார் அனுமதி தரவில்லை.

இதனால் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில், போராட்டத்துக்கு அனுமதி கோரி நாம் தமிழர் கட்சி சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

ADVERTISEMENT

இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி புகழேந்தி, வாரம் வாரம் போராட்டம் நடத்துவீர்களா? கடந்த வாரம் போராட்டம் நடத்தியதையே மறைத்துவிட்டு மனுத் தாக்கல் செய்து நீதிமன்ற நேரத்தை வீணடிக்கிறீர்களா? என நாம் தமிழர் கட்சியினருக்கு கடும் கண்டனம் தெரிவிததார். மேலும் நாம் தமிழர் கட்சியின் ஜூலை 8-ந் தேதி போராட்டத்துக்கு அனுமதி மறுத்த நீதிமன்றம். இந்த வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்தது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share