’பொன்னியின் செல்வன்’ படத்தை இணையதளங்களில் வெளியிட தடை!

Published On:

| By Prakash

’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடுவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் விக்ரம், ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், பார்த்திபன், கார்த்தி, ஜெயராம் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருக்கும் ’பொன்னியின் செல்வன்’ முதல் பாகம் திரைப்படம் நாளை (செப்டம்பர் 30) வெளியாக இருக்கிறது.

ADVERTISEMENT

இத்திரைப்படம் உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரமிக்கத்தக்க காட்சிகளுடன், மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ள இந்த படத்தை லைகா நிறுவனம் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளது.

இந்த நிலையில், “ ’பொன்னியின் செல்வன்’ படத்தை அரசு மற்றும் தனியாரின் இணையதள சேவை நிறுவனங்கள் மூலம் சட்டவிரோதமாக 2,405 இணையதளங்களில் வெளியிட தடை விதிக்க வேண்டும்” என படத் தயாரிப்பு நிறுவனமான லைக்கா சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

ADVERTISEMENT

இந்த வழக்கு நீதிபதி எம்.சுந்தர் முன்பு இன்று (செப்டம்பர் 29) விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன், “மிகுந்த பொருட்செலவில் படத்தை வெளியிட உள்ளதால், திருட்டுத்தனமாக இணையதளங்களில் வெளியிட்டால் பெருத்த நஷ்டம் ஏற்படும்.

ADVERTISEMENT

இதனால் திரைக் கலைஞர்களின் வாழ்க்கை பாதிக்கப்படும். ஆகையால் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தை சட்டவிரோதமாக இணைய தளங்களில் வெளியிட தடை விதிக்க வேண்டும்” என கோரிக்கை வைத்தார்.

இதையடுத்து, ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட நீதிபதி எம்.சுந்தர் தடைவிதித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஜெ.பிரகாஷ்

காசியின் புனிதம் கலந்த காதல் கதை ‘பனாரஸ்’!

நானே வருவேன் : வெற்றி நடை போடுமா?

Photo of author
Prakash
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share