நானியின் பார்ட்டி வைப் சாங் ‘Odiyamma’ ரிலீஸ்!

Published On:

| By Monisha

hi nanna movie odiyamma song

நடிகர் நானி நடிப்பில் அறிமுக இயக்குனர் சௌரவ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “ஹாய் நான்னா”.  இந்த படத்தை வைரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம்  தயாரித்துள்ளது. இந்த படத்தில் நடிகை மிருணாள் தாகூர், நடிகை ஸ்ருதி ஹாசன், நடிகர் ஜெயராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

ஹாய் நான்னா படத்தின் ஃபர்ஸ்ட் லுக், க்ளிம்ஸ் வீடியோ, பாடல்கள், டீசர், ட்ரெய்லர் என அனைத்தும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்நிலையில் இன்று (நவம்பர் 28) ஹாய் நான்னா படத்திலிருந்து ’Odiyamma’ என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பாடலை நடிகை ஸ்ருதி ஹாசன் மற்றும் நடிகர் துருவ் விக்ரம் இணைந்து பாடியுள்ளார்கள். ஒடியம்மா பாடல் ஒரு பக்கா பார்ட்டி சாங் வைப்பில் உருவாகியுள்ளது.

ஒடியம்மா பாடல் ரிலீஸ் முன்னிட்டு நேற்று (நவம்பர் 27) இந்த பாடலின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது ஒடியம்மா பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

– கார்த்திக் ராஜா

ஞானவேலின் பின்னால் சிவகுமார், சூர்யா, கார்த்தி: கரு பழனியப்பன் சந்தேகம்!

நடிகர் விஷால் சிபிஐ அலுவலகத்தில் ஆஜர்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share