உங்கள் உள்ளுணர்வை நம்புங்கள்: பூஜா ஹெக்டே

Published On:

| By Balaji

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் பீஸ்ட். இந்தப் படத்தில் விஜய்யுடன் நடிப்பவர் தெலுங்கு தேசத்து இறக்குமதி நடிகையான பூஜா ஹெக்டே. இவர் தெலுங்கில் ஆச்சார்யா, மோஸ்ட் எலிஜிபிள் பேச்சுலர், ராதே ஷ்யாம் ஆகிய படங்களில் நடித்தவர்.

அதில் அகில் அக்கினேனியுடன் இணைந்து நடித்த மோஸ்ட் எலிஜிபிள் பேச்சுலர் என்ற படம் கடந்த 15ஆம் தேதி வெளியாகி வெற்றி பெற்றுள்ளது. இதுபற்றி பூஜா ஹெக்டே கூறுகையில், “நான் ஒரு திரைப்படத்தைத் தேர்வு செய்யும்போது எனது உள்ளுணர்வை முழுமையாக நம்புவேன். அப்படி நான் நம்பி நடித்த படம்தான் மோஸ்ட் எலிஜிபிள் பேச்சுலர். என் நம்பிக்கை வீண்போகாத வகையில் அந்தப் படம் வெற்றி பெற்றுள்ளது.

ADVERTISEMENT

அதற்காக கடவுளுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். நீங்கள் எப்போதும் உங்கள் உள்ளுணர்வை நம்புங்கள். அது எப்போதும் உங்களை சரியான திசையில் வழிநடத்தும்” என்கிறார் பூஜா ஹெக்டே.

**-அம்பலவாணன்**

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share