கனமழை எதிரொலி : இன்று எந்தெந்த மாவட்டங்களில் விடுமுறை தெரியுமா?

Published On:

| By christopher

Heavy rains: Do you know which districts have a holiday today?

பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், இன்று (நவம்பர் 13) தமிழகத்தில் பல்வேறு மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக வரும் 15ஆம் தேதி வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் என ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

அதனைத்தொடர்ந்து சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டது.

நேற்று இரவு முதல் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் விடிய விடிய மழை கொட்டித் தீர்த்து வருகிறது.

மேலும் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை ஆகிய 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக  மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

கடலூர், அரியலூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

அதேவேளையில், புதுச்சேரி, விழுப்புரம், சென்னை உள்ளிட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் இன்று வழக்கம்போல் செயல்படும் என ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

டாப் 10 நியூஸ் : ஜார்க்கண்ட் முதற்கட்ட தேர்தல் முதல் பன்னீர் தம்பி வழக்கில் தீர்ப்பு வரை!

பணிகளைப் புறக்கணித்து போராட்டம் நடத்திய தூய்மைப் பணியாளர்கள்: என்ன காரணம்?

கொடைக்கானல் செல்லும் வாகனங்களுக்கு புதிய கட்டுப்பாடு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share