தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் கன மழை பெய்யும்?

Published On:

| By Selvam

வங்கக்கடல்‌ பகுதியில்‌ நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதால், தமிழகத்தில் நான்கு நாட்களுக்கு கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நேற்று (அக்டோபர் 21) அந்தமான்‌ கடல்‌ மற்றும்‌ தென்கிழக்கு வங்கக்கடல்‌ பகுதியில்‌ நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வடமேற்கு திசையில்‌ நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இன்று (அக்டோபர் 22) காலை 8.30 மணி அளவில்‌ தென்கிழக்கு மற்றும்‌ அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல்‌ பகுதியில்‌, போர்ட்‌ பிளேர்க்கு, மேற்கு- வடமேற்கு திசையில்‌ 110 கிலோ மீட்டர்‌ தொலைவிலும்‌, சாகர்‌ தீவுக்கு தெற்கு- தென்கிழக்கு திசையில்‌ 1460 கிலோ மீட்டர்‌ தொலைவிலும்‌ நிலை கொண்டுள்ளது.

ADVERTISEMENT

இது வடமேற்கு திசையில்‌ நகர்ந்து மத்திய கிழக்கு மற்றும்‌ அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்கக்கடல்‌ பகுதியில்‌ அக்டோபர்‌ 23ஆம்‌ தேதி காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.

பின்னர்‌ வடக்கு- வட கிழக்கு திசையில்‌ நகர்ந்து மத்திய கிழக்கு வங்கக்கடல்‌ பகுதியில்‌ அக்டோபர்‌ 24-ஆம்‌ தேதி காலை புயலாக வலுப்பெறக்கூடும்‌.

ADVERTISEMENT

அதன்‌ பின்னர்‌ வடக்கு- வடகிழக்கு திசையில்‌ நகர்ந்து அக்டோபர்‌ 25-ஆம்‌ தேதி அதிகாலை வங்கதேச கடற்கரையில்‌ டிங்கோனா தீவு மற்றும்‌ சந்திவிப்‌ இடையில்‌ கரையை கடக்கும்‌ என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

ADVERTISEMENT

நீலகிரி, ஈரோடு, திருவள்ளூர்‌, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம்‌ மற்றும்‌ செங்கல்பட்டு மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும், நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை, அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒருசில பகுதிகளில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்‌.

செல்வம்

கனடாவில் துப்பாக்கி விற்பனைக்கு தடை!

“100 ஆண்டுகாலப் பிரச்சினை 100 நாளில் போய்விடாது”- பிரதமர் மோடி பேச்சு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share