அடுத்த 4 நாட்களுக்கு கனமழை: எங்கெங்கே?

Published On:

| By srinivasan

காற்றின் திசை வேக மாறுபாடு காரணமாக செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நீலகிரி, கோவை, தேனி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் ஆக.27ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக  சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழக கடலோரப் பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில்,

ADVERTISEMENT

பெரும்பாலான இடங்களில் அடுத்த நான்கு நாட்களுக்கு  இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

heavy rainfall expected

ஆகஸ்ட் 27 ஆம் தேதி வரை  தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும்

ADVERTISEMENT

டெல்டா மாவட்டங்கள், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள்,

புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
  • க.சீனிவாசன்

5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share