ADVERTISEMENT

சென்னையில் அதிகாலை முதல் இடி மின்னலுடன் கனமழை- 50 நிமிடத்தில் 10 செ.மீ. கொட்டியது!

Published On:

| By Mathi

Chennai Rain

சென்னையில் இன்று (ஆகஸ்ட் 22) அதிகாலை முதல் இடி மின்னலுடன் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. சென்னையில் 50 நிமிடங்களில் 5 செ.மீ மழை பதிவாகி உள்ளது.

சென்னை மாநகரின் பல பகுதிகளில் இன்று அதிகாலை முதல் திடீரென மழை கொட்டி வருகிறது. இடி மின்னலுடன் கனமழை பெய்து வருவதால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

ADVERTISEMENT

வளிமண்டலத்தில் காற்று மாறுபாடு காரணமாக இந்த கனமழை கொட்டுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் சென்னை மாநகரில் 50 நிமிடங்களில் 10 செ.மீ மழை பதிவாகி உள்ளது. சென்னை நுங்கம்பாக்கம், அடையாறு, ராஜா அண்ணாமலைபுரம் பகுதிகளில் 5 செ.மீ மழை பதிவாகி இருக்கிறது. இந்த கனமழை காலை 9 மணி வரை தொடரும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share