கனமழை எச்சரிக்கை : தீபம் ஏற்றும் போது மழை பெய்யுமா?

Published On:

| By Kavi

தமிழகத்தில் இன்று 10க்கும் அதிகமான மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக மழை கொட்டி தீர்த்தது. இன்று காலை முதல் மிதமான மழை பெய்து வருகிறது.

ADVERTISEMENT

இந்தநிலையில் இன்று (நவம்பர் 3) நீலகிரி, கோயம்புத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் சென்னை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, மதுரை, விருதுநகர், திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மற்றும் புதுவையில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறுகிறது.

இன்று (டிசம்பர் 03) கார்த்திகை தீபம். திருவண்ணாமலை மலையில் தீபத்தை முன்னிட்டு மகா தீபம் ஏற்றப்படும். அதன்படி இன்று மாலை 6 மணிக்கு தீபம் ஏற்ற திட்டமிட்டப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதையொட்டி 2,668 அடி உயரமுள்ள கோயில் பின்புறம் உள்ள அண்ணாமலையார் மலை உச்சியில் தீபம் ஏற்றுவதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இதன் காரணமாக திருவண்ணாமலையில் சுமார் 10 லட்சம் சிவன் பக்தர்கள் குவிந்திருக்கின்றனர்.

இந்தசூழலில் தான் திருவண்ணாமலை உட்பட 25 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. குறிப்பாக மகா தீபம் ஏற்றப்படும் நேரத்தில் திருவண்ணாமலையில் லேசான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

ADVERTISEMENT

திருவண்ணாமலையில் தீபம் ஏற்றப்பட்ட பின் தமிழகத்தில் அனைத்து வீடுகளிலும் தீபம் ஏற்றப்படும் என்பது குறிப்பிடத்தக்கது

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share