தென்மாவட்டங்களுக்கு மீண்டும் கனமழை எச்சரிக்கை!

By christopher

|

Published on 27 Dec 2023, 1:33 PM

Heavy rain warning again for southern districts

தென்மாவட்டங்களில் வரும் டிசம்பர் 31ஆம் தேதியன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

டிசம்பர் மாத தொடக்கத்தில் சென்னையில் பாதிப்பை ஏற்படுத்திய மிக்ஜாம் புயலை தொடர்ந்து தென்மாவட்டங்களில் கடந்த 17,18ஆம் தேதிகளில் பெய்த அதி கனமழை திருநெல்வேலி, தூத்துக்குடியில் மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

தற்போது நடைபெற்று வரும் வெள்ள மீட்பு நிவாரண பணிகளால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். இந்தநிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (டிசம்பர் 27) முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் வரும் 31ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பு என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மேலும் இன்று முதல் ஜனவரி 2ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலின் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே பெய்த அதி கனமழையால் திருநெல்வேலி, தூத்துக்குடியைச் சேர்ந்த மீனவர்கள் கடந்த 10 நாட்களாக கடலுக்கு செல்ல முடியாமல் வாழ்வாதாரத்தை இழந்து தவித்தனர்.

ADVERTISEMENT

அவர்கள் இன்று முதல் மீண்டும்‌ கடலுக்கு சென்றுள்ள நிலையில், சென்னை வானிலை மையத்தின் இந்த அறிவிப்பு தென்மாவட்ட மீனவர்கள் மற்றும் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

முதலீட்டாளர்கள் மாநாட்டில் வில்லேஜ் குக்கிங் சேனல் குழு!

ராகுல் காந்தியின் பாரத் நியாய யாத்திரை: ஜனவரி 14-ல் மணிப்பூரில் துவக்கம்!

“முடக்கறுத்தான்” கதை என்ன?: சமுத்திரகனி

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

christopher

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel