வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் நேற்று இரவு, எல்லா இடங்களிலும் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக மணலியில் 15 செ.மீ மழையும், குறைந்தபட்சமாக கொரட்டூரில் 1 செ.மி மழையும் பதிவானது.
திருவண்ணாமலை, அரியலூர், போன்ற மாவட்டங்களிலும் மழை பெய்தது. இதனால் இன்று காலை வானிலை சற்று இதமாக இருந்தது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 40.5° வெப்பநிலையும், குறைந்தபட்சமாக ஈரோட்டில் 18.8° வெப்பநிலை பதிவானது.
இந்த நிலையில் சென்னை வானிலை அறிக்கை இன்று (செப்டம்பர் 24) வெளியிட்டுள்ள அறிக்கையில் “மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்ககடல் பகுதிகளில் மற்றும் வடக்கு ஆந்திரா தெற்கு ஒரிசா கடலோரப்பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.
இதனால் இன்று வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
மீனவர்களுக்கான எச்மாசரிக்கை:
தமிழக கடலோரப்பகுதிகள்
இன்று முதல் செப்டம்பர் 27 வரை, மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
அரபிக்கடல் பகுதிகள்
இன்று மற்றும் நாளை, தென்மேற்கு அரபிக்கடலின் மேற்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
கேரள கர்நாடக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
அதனால் மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
லட்டு விவகாரம் : பவன் கல்யாணிடம் வருத்தம் தெரிவித்த கார்த்தி
சிக்கிய வலுவான ஆதாரங்கள் : கொச்சியில் மறுப்பு, டெல்லிக்கு ஓட்டம் பிடித்த நடிகர் சித்திக்
பழனி பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரை… இயக்குனர் மோகன் ஜி கைது!