கனமழை : பொதுக்கூட்டத்தை ரத்து செய்த ராமதாஸ்

Published On:

| By Kavi

கனமழை எச்சரிக்கை காரணமாக பாமக நிறுவனர் ராமதாஸ் கட்சி பொதுக் கூட்டத்தை ரத்து செய்துள்ளார்.

விசிக தலைவர் திருமாவளவன் கடந்த அக்டோபர் 2ஆம் தேதி கள்ளக்குறிச்சியில் மதுஒழிப்பு மாநாடு நடத்தினர். அடுத்ததாக தவெக தலைவர் விஜய் வரும் அக்டோபர் 27ஆம் தேதி விக்கிரவாண்டியில் மாநாடு நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.

இதற்கிடையே பாமக நிறுவனர் ராமதாஸ் பொதுக்கூட்டம் அறிவித்திருந்தார்.

விசிக மாநாட்டுக்கு போட்டியாக பாமகவின் மாநாடு!

வன்னியர்களுக்கு 10.5 சதவிகித இட ஒதுக்கீடு, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் இளைஞர்கள் மீது தமிழக அரசு கவனம் செலுத்தவில்லை என்று கண்டனம் தெரிவித்தும் 3 இடங்களில் மாநாடு நடத்தப்படும் என்று பாமக தலைமை அறிவித்தது.

அக்டோபர் 17 கடலூரிலும், அக்டோபர் 20 திண்டிவனத்திலும், அக்டோபர் 26 சேலத்திலும் மாநாடு நடத்தப்படும் என்று தேதி அறிவிக்கப்பட்டது.

இந்தசூழலில் வடகிழக்கு பருவமழையால் சென்னை உட்பட பல மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்டும், ஆரஞ்சு அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே பெய்த மழையால் தென்காசி, மதுரை, புதுகோட்டை, சிவகங்கை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் மக்கள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்தசூழலில், “தமிழ்நாட்டில் அடுத்துவரும் நாட்களில் வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதைக் கருத்தில் கொண்டு பாமக பொதுகூட்டங்கள் ஒத்திவைக்கப்படுகின்றன. டிசம்பர் மாதத்தின் பிற்பகுதியில் இந்தப் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும்” என்று ராமதாஸ் அறிவித்துள்ளார்.

இந்த மழைக்கு களத்தில் ஆக்கப்பூர்வமாக எந்த முன்னேற்பாடுகளும் தமிழக அரசால் செய்யப்படவில்லை என்றும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

கனமழை : ஐடி ஊழியர்கள் வீட்டிலிருந்த வேலை செய்ய அறிவுறுத்தல்!

சென்னைக்கு காத்திருக்கும் கனமழை… தயார் நிலையில் போட், ஜேசிபி, நிவாரண முகாம்கள்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share