தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று ஜூலை 17-ந் தேதி கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. Rain Coimbatore Weather
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் தரைக்காற்று வீச வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
மேலும் கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள் தேனி, தென்காசி, மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, தென்காசி, வேலூர் திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
