தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை பெய்யக் கூடும் என்பதால் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். Heavy Rain
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்கள் மீது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதேபோல மத்திய- மத்திய மேற்கு வங்க கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழைக்கான வாய்ப்பு உள்ளது. 7 முதல் 11 செமீ வரை மழை பதிவாகக் கூடும். இதனால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. சென்னை மாநகரில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கான வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
