சென்னையில் கொட்டித் தீர்த்த கனமழை… அடுத்த மூன்று மணி நேரத்திற்கு அலர்ட்!

Published On:

| By Selvam

தமிழகத்தில் செப்டம்பர் மாத தொடக்கத்தில் வெயில் வாட்டி வதைத்த நிலையில், வெயிலின் தாக்கம் கடந்த வாரம் சற்று குறைந்தது. இந்தசூழலில், கடந்த வாரம் முதல் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழையானது பெய்து வருகிறது.

அந்தவகையில், சென்னையில் நேற்று (செப்டம்பர் 26) இரவு கனமழை பெய்ததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். குறிப்பாக, திருவான்மியூர், அண்ணா நகர், அடையாறு, கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், சைதாப்பேட்டை, கோயம்பேடு, அம்பத்தூர், ஆவடி, பள்ளிக்கரணை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.

ADVERTISEMENT

இதனால் சாலைகளில் மழைநீர் தேங்கியது. மேலும், ஒருசில வீடுகளில் மழைநீர் புகுந்தது. துரைசாமி சுரங்கப்பாதை,  ஸ்டான்லி மருத்துவமனை அருகில் உள்ள சுரங்கப்பாதை மற்றும் நுங்கம்பாக்கம் சுரங்கப்பாதைகளில் மழைநீர் சூழ்ந்தது. சுரங்கப்பாதைகளில் சூழ்ந்த மழைநீர் வெளியேற்றப்பட்டு விட்டதாக மாநகராட்சி தரப்பில் இன்று காலை தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மேலும், கனமழை காரணமாக டெல்லி, பெங்களூரு, கோவை, திருச்சி, ஹைதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து  சென்னை வந்த 35 விமானங்கள் தரையிரங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

ADVERTISEMENT

சென்னையைப் பொறுத்தவரை, அம்பத்தூர் 13.4 செ.மீ, வானகரம் 12.66 செ.மீ, மலர்காலனி 12.3 செ.மீ, மணலி 9 செ.மீ, திரு.வி.க. நகர் 9 செ.மீ, அண்ணாநகர், கொளத்தூர், கோடம்பாக்கம் பகுதிகளில் 8 செ.மீ, புழல், மாநகராட்சி அலுவலகம், ராயபுரம், திருவொற்றியூர், ஐஸ் ஹவுஸ் பகுதிகளில் 7 செ.மீ, மாதவரம், ஆலந்தூர், மதுரவாயல், சோழிங்கநல்லூர் பகுதிகளில் 6 செ.மீ அளவு மழை பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

காலாண்டு விடுமுறை: நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்… முழு விவரம் இதோ!

டாப் 10 நியூஸ்: ஸ்டாலின் டெல்லி பயணம் முதல் செந்தில் பாலாஜி வழக்கில் தீர்ப்பு வரை!

Photo of author
Selvam
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share