கனமழை: எந்தெந்த மாவட்டங்களுக்கு விடுமுறை?

Published On:

| By Selvam

heavy rain kanyakumari district schools leave

கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று (அக்டோபர் 3) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளிலும்  மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று முதல் நாகர்கோவில், குழித்துறை பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

ADVERTISEMENT

இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. கன மழை காரணமாக நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதனால் குழித்துறை, தாமிரபரணி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

காலாண்டு விடுமுறை முடிந்து இன்று 6 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து உத்தரவிட்டுள்ளார்.

செல்வம்

ADVERTISEMENT

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: நெல்லிக்காய் சாதம்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share