ரெட் அலர்ட்… நீலகிரியில் கொட்டித் தீர்க்கும் கனமழை!

Published On:

| By Selvam

கேரளாவில் தென்மேற்கு பருவமழை நேற்று (மே 24) தொடங்கிய நிலையில், தமிழகத்தில் மழையின் தாக்கம் இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. heavy rain in nilgiris

அதன்படி, இன்று (மே 25) நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையும், திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், தேனி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நேற்று இரவு முதல் நீலகிரி, கோவை மாவட்டத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. உதகை அருகே உள்ள நஞ்சநாடு, கப்பத்துறை உள்ளிட்ட பகுதிகளில் மலை பயிர்களான கேரட், உருளைக்கிழங்கு பயிரிட்ட விவசாய நிலங்களுக்குள் மழை நீர் புகுந்தது. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அவலாஞ்சி – 20, பந்தலூர் – 9, எமரால்டு – 9, சேரங்கோடு – 9, தேவாலா – 8, கூடலூர் – 7 செ.மீ மழை பதிவாகியுள்ளது. மழை முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக, 456 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளன. heavy rain in nilgiris

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share