நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. Heavy rain in Nilgiris Coimbatore
தமிழகத்தில் கோவை, நீலகிரி, தேனி உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலை அமைந்துள்ள மாவட்டங்களை தவிர மற்ற இடங்களில் மக்களை வெயில் வாட்டி வதைக்கிறது. சென்னையை பொறுத்தவரை நேற்று பகலில் வெயில் கொளுத்திய நிலையில், நேற்றிரவு ஆங்காங்கே நல்ல மழை பெய்தது.
சென்னை செண்ட்ரலில் அதிகபட்சமாக 7 செமீ மழை பெய்துள்ளது. வெப்பநிலையை பொறுத்தவரை மதுரை விமான நிலையத்தில் அதிகபட்சமாக 41.2° செல்சியல் வெயில் பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக கரூர் பரமத்தியில் 22.0° செல்சியல் வெயில் பதிவாகியுள்ளது.
இந்தநிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (ஜூலை 12) வெளியிட்ட அறிவிப்பில், “மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, ஜூலை 14 வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
15-07-2025 அன்று நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஜூலை 16 முதல் 18 வரை நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதிகபட்ச வெப்பநிலையை பொறுத்தவரை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3 ° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
12-07-2025 ,13-07-2025 ஆகிய தேதிகளில் அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும், குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட அதிகமாகவும் இருக்கும் நிலையில், தமிழகத்தில் ஓரிரு பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம்” என்று தெரிவித்துள்ளது.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 ° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்றும் கூறியுள்ளது. Heavy rain in Nilgiris Coimbatore
