தமிழகத்தில் இன்று (அக்டோபர் 15) முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் வட மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னையில் நேற்று (அக்டோபர் 14) இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் நகரின் பல பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மழைநீரை மோட்டார் பம்புகள் மூலம் வெளியேற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி மற்றும் அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, மாநகராட்சி மேயர் பிரியா உள்ளிட்டோர் மழைநீர் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், பெரம்பூர் ரயில்வே சுரங்கப்பாதை, கணேசபுரம் சுரங்கப்பாதை, சுந்தரம் பாயிண்ட் சுரங்கப்பாதை, கெங்கு ரெட்டி சுரங்கப்பாதை, மேட்லி சுரங்கப்பாதை, ரங்கராஜபுரம் சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. சுரங்கப்பதையில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அவசர போன்.. நள்ளிரவில் கிளம்பிய உதயநிதி.. அதிகாரிகள் பதட்டம் – என்ன நடந்தது?
கொட்டும் மழையில் ஆய்வு : களப்பணியாளர்களுக்கு டீ வாங்கிக் கொடுத்த ஸ்டாலின்
