4 மாவட்டங்களில் கனமழை : எங்கெங்கு?

Published On:

| By Kavi

நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. heavy rain in 4 districts tamilnadu

தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாகவே வெயில் மக்களை வாட்டி வதைக்கிறது. ஆங்காங்கே லேசான மழை பெய்தாலும் அதிக வெப்பம் காரணமாக மக்கள் அசௌகரியத்தை எதிர்கொள்கின்றனர்.

ADVERTISEMENT

இந்தநிலையில் நேற்று இரவு சென்னை, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்ததால் குளிர்ந்த வானிலை நிலவுகிறது. ஆனால் இன்று காலை முதல் மீண்டும் வெயில் சுட்டெரிக்கிறது.

இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (ஜூலை 15) வெளியிட்ட அறிவிப்பில், “மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக நீலகிரி, கோவை மாவட்டங்களில் வரும் 17ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை 5 நாட்கள் மிக கனமழை பெய்யும்” என்று ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மேலும், “வரும் 17ஆம் தேதி தேனி, திண்டுக்கல், தென்காசி, திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது

18ஆம் தேதி சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, தேனி, தென்காசியில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

ADVERTISEMENT

வரும் 19 ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை தேனி, தென்காசியில் கனமழைக்கு வாய்ப்புள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. heavy rain in 4 districts tamilnadu

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share