ADVERTISEMENT

கனமழை: 7 மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை

Published On:

| By Mathi

School Leave

கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் 5 மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு இன்று டிசம்பர் 3-ந் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

வங்க கடலில் உருவான டிட்வா புயல் வலுவிழந்த நிலையில் சென்னைக்கு அருகே நிலை கொண்டிருக்கிறது. இதனால் கடந்த சில நாட்களாக சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.

ADVERTISEMENT

சென்னை எண்ணூரில் அதிகபட்சமாக 13 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

இன்றும் கனமழை தொடருவதால்

ADVERTISEMENT
  • சென்னை
  • திருவள்ளூர்
  • காஞ்சிபுரம்

ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

  • செங்கல்பட்டு
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • கடலூர்

ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அரக்கோணம் மற்றும் நெமிலி தாலுகாக்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

புதுச்சேரீலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்

  • நீலகிரி
  • ஈரோடு
  • கோவை

ஆகிய மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக் கூடும்

  • திருப்பூர்
  • தேனி
  • திண்டுக்கல்
  • தென்காசி
  • நெல்லை
  • கன்னியாகுமரி
  • சேலம்
  • நாமக்கல்

ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share