எத்தனை மாவட்டங்களுக்கு கனமழை? வானிலை மையம் தகவல்!

Published On:

| By Jegadeesh

Heavy rain for how many districts

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் வரும் ஆறு நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் இன்று (ஆகஸ்ட் 11) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “இன்று (ஆகஸ்ட் 11) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை, நாமக்கல், சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்கள் மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைபகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

ADVERTISEMENT

நாளை (ஆகஸ்ட் 12) மற்றும் நாளை மறுநாள் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஆகஸ்ட் 14 முதல் 17வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கையை பொறுத்தவரை, இன்று முதல் 14 ஆம் தேதி வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மு.வா.ஜெகதீஸ் குமார்

நான் என்ன பேசினேன்? மோடி என்ன பேசுகிறார்? – அமைச்சர் எ.வ.வேலு விளக்கம்!

ADVERTISEMENT

தங்கம் விலை: இன்றைய நிலவரம்!

ஓபிஎஸ் தலைமையில் ஆகஸ்ட் 20-ல் மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!

Photo of author
Jegadeesh
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share