தமிழகத்தில் இன்னும் 4 நாட்களுக்கு கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. heavy rain continues
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. பல்வேறு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
இந்திய மற்றும் சென்னை வானிலை ஆய்வு மையங்கள் பொதுமக்களுக்கு தினசரி வானிலை முன்னெச்சரிக்கைகளையும் கொடுத்து வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “நவம்பர் 30 முதல் டிசம்பர் 4 வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
டிசம்பர் 1 முதல் 4 வரை கடலோர தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கனமழையுடன் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய தெற்கு அந்தமான் கடற்பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து, இன்று நவம்பர் 30 ஆம் தேதி காலை 5.30 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ளது.
இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது.
அதன்பிறகு, இது வடமேற்கு திசையில் நகர்ந்து, டிசம்பர் 02 ஆம் தேதி வாக்கில் தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடலில் படிப்படியாக ஒரு சூறாவளி புயலாக வலுவடையும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
வங்கக்கடலில் மீன் பிடிக்க சென்றுள்ள மீனவர்கள் நவம்பர் 30 ஆம் தேதிக்குள் (இன்று) கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
ஏமாத்திட்டு போன பணத்தை பைசா பாக்கி இல்லாம திருப்பி கொடுக்கணும்:சமுத்திரக்கனி காட்டம்
அதிமுக பெயர், சின்னம், கொடியை பயன்படுத்த மாட்டேன்: ஓபிஸ்
‘பொளீர் பொளீர்னு அடிப்பேன்’ எக்குத்தப்பாக வாயை விட்ட விஷ்ணு… சர்வாதிகாரியாக மாறிய நிக்ஸன்
heavy rain continues
