அதி கனமழை எச்சரிக்கை: நீலகிரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை!

Published On:

| By Minnambalam Desk

Nilgiris Heavy Rain

அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் நீலகிரி மாவட்டத்தில் நாளை ஜூன் 14-ந் தேதி பள்ளிகளுக்கு மட்டும் மாவட்ட நிர்வாகம் விடுமுறை அறிவித்துள்ளது. Heavy Rain Alert

தென்னிந்திய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நீலகிரி, கோவை மாவட்டத்தில் நாளை ஜூன் 14-ந் தேதி அதி கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம்.

இதனையடுத்து நீலகிரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை ஜூன் 14-ந் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் அறிவிப்பை மீறி செயல்படும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share