கோவை, நீலகிரி, நெல்லை, குமரி, தேனி, திண்டுக்கல் மக்களே உஷார்! இன்று முதல் ஜூன் 19 வரை கனமழை எச்சரிக்கை!

Published On:

| By Minnambalam Desk

Heavy Rain Alert

தென்னிந்திய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் இன்று ஜூன் 13-ந் தேதி முதல் ஜூன் 19-ந் தேதி கோவை, நீலகிரி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Heavy Rain Alert

வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட அறிவிப்பு:

ADVERTISEMENT

வடக்கு கர்நாடகா, தெலுங்கானா மற்றும் ஆந்திரா பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது; தென்னிந்திய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இன்று ஜூன் 13-ந் தேதி: கோவை, நீலகிரி மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு; திருநெல்வேலி மாவட்ட மலைப் பகுதிகள்,தென்காசி, கன்னியாகுமரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

ADVERTISEMENT

ஜூன் 14-ந் தேதி நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் அதி கனமழைக்கு வாய்ப்பு; திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு; தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு.

ஜூன் 15: நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் அதி கனமழைக்கு வாய்ப்பு; திருநெல்வேலி மாவட்ட மலைப் பகுதிகள், தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை; திருப்பூர், மதுரை, விருதுநகர், திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

ADVERTISEMENT

ஜூன் 16: கோவை, நீலகிரி மாவட்ட மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது; திருநெல்வேலி மாவட்ட மலைப் பகுதிகள், தேனி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்ட ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

ஜூன் 17: நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை; கோவை மாவட்ட மலைப்பகுதிகள்; தேனி, தென்காசி ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

ஜூன் 18: நீலகிரி, கோவை மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

ஜூன் 19: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை- காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக் கூடும்.

வானிலை மையத்தின் முழுமையான அறிக்கை:

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share