பரவிய தென்மேற்கு பருவமழை : உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி!

Published On:

| By Kavi

தென்மேற்கு பருவமழை தமிழகம் முழுவதும் பரவியது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. heavy rain alert for tamilnadu

கடந்த 24ஆம் தேதி தமிழகத்தில் கோவை, நீலகிரி ஆகிய பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இதனால் இவ்விரு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

ADVERTISEMENT

அதிகபட்சமாக, அவலாஞ்சி (நீலகிரி) 35 செமீ, மேல் பவானி (நீலகிரி) 30 செமீ, சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்) 21 செமீ, எமரால்டு (நீலகிரி) 18செமீ, கூடலூர் பஜார் (நீலகிரி) 15செமீ, விண்ட் வொர்த் எஸ்டேட் (நீலகிரி), தாலுகா அலுவலகம் பந்தலூர் (நீலகிரி) தலா 14 செமீ, மேல் கூடலூர் (நீலகிரி), சிறுவாணி அடிவாரம் (கோயம்புத்தூர்), வால்பாறை PTO (கோயம்புத்தூர்) தலா 13 செமீ,
சின்கோனா (கோயம்புத்தூர்) 12 செமீ மழை பதிவாகியுள்ளது.

இந்தநிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (மே 25) வெளியிட்ட அறிவிப்பில், “இன்று, தென்மேற்கு பருவமழை தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் பரவியுள்ளது
மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி 27-ஆம் தேதி வாக்கில் (நாளை) உருவாகக்கூடும்.

ADVERTISEMENT

26-05-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஒரிரு இடங்களில் தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஒருசில இடங்களில் கன முதல் அதி கனமழையும், திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், தேனி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல், விருதுநகர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

27-05-2025: கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

ADVERTISEMENT

28-05-2025: கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. heavy rain alert for tamilnadu

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share