தென்னிந்தியாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கேரளாவில் அதிகனமழை கொட்டி வருகிறது. தமிழ்நாட்டில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. Heavy Downpour in Nilgiris: Avalanche Records 29.2 cm Rainfall in 24 Hours!
நீலகிரி மாவட்டத்தில் அதிக கனமழை பெய்யும் என ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்தது. நீலகிரியின் அவலாஞ்சியில் கடந்த 24 மணிநேரத்தில் 29.2 செமீ மழை பெய்தது.
அப்பர் பவானியில் 16.8 செமீ
பார்சன்வேலியில் 13.2 செமீ
பந்தலூரில் 13 செமீ மழை கொட்டித் தீர்த்தது.
கோவை சின்ன கல்லாறில் 18 செமீ மழை பதிவாகி உள்ளது.
தமிழ்நாட்டில் இன்றும் நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, தென்காசி மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதனையடுத்து நீலகிரியில் 4 தாலுகாக்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல கோவை வால்பாறை தாலுகாவில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.
