சென்னை விமான நிலையத்தில் நெரிசலில் சிக்கி கீழே தடுமாறி விழுந்த விஜய்

Published On:

| By Mathi

Vijay Airport

சென்னை விமான நிலையத்தில் தவெக தலைவர் விஜய், கூட்ட நெரிசலில் சிக்கி கீழே தடுமாறி விழுந்ததால் பதற்றம் ஏற்பட்டது.

விஜய் நடித்துள்ள கடைசி திரைப்படமான ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சி மலேசியாவில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு விஜய், நேற்று (டிசம்பர் 28) இரவு சென்னை திரும்பினார்.

ADVERTISEMENT

சென்னை விமான நிலையத்தில் விஜய்யை காண தவெக தொண்டர்களும் ரசிகர்களும் பெருமளவில் குவிந்திருந்தனர். அப்போது, ரசிகர்களை பார்த்து கையசைத்து பறக்கும் முத்தம் கொடுத்தார் விஜய்.

இதன் பின்னர் விஜய் காரில் ஏற சென்ற போது, கூட்ட நெரிசலில் சிக்கி தடுமாறி கீழே விழுந்தார். உடனே அவரது பாதுகாவலர்கள் விஜய்யை தாங்கி பிடித்து பாதுகாப்பாக காரில் ஏற்றி வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். விஜய் வீட்டு முன்பாகவும் குழந்தைகளுடன் நள்ளிரவிலும் ரசிகர்கள் காத்திருந்தனர். விஜய் வீடு வந்து சேர்ந்த போது ஆரவாரம் செய்து மகிழ்ச்சியை ரசிகர்கள் வெளிப்படுத்தினர்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share