சுட்டெரிக்கப்போகும் வெயில் : வானிலை மையம் எச்சரிக்கை!

Published On:

| By Kavi

தமிழகத்தில் மழை பொழிவு குறைந்து வெப்பம் அதிகரித்து வருகிறது. நேற்று (ஜூன் 20) அதிகபட்சமாக மதுரை விமான நிலையம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் 105 டிகிரி வெயிலும், வேலூரில் 104 டிகிரி வெயிலும், சென்னை மீனம்பாக்கம், ஈரோடு மாவட்டத்தில் 103 டிகிரி வெயிலும் பதிவாகியுள்ளது. heatwave increase in tamilnadu

கடலூர், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 100 டிகிரியை கடந்து வெயில் பதிவானது.

ADVERTISEMENT

இந்தநிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (ஜூன் 21) வெளியிட்ட அறிவிப்பில்,

“மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று முதல் வரும் 27ஆம் தேதி வரை
தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை மாறுதலின் போக்கு

ADVERTISEMENT

21-06-2025 மற்றும் 22-06-2025: தமிழகம் மற்றும் புதுவையில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3° செல்சியஸ் வரை உயரக்கூடும்.

இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு

ADVERTISEMENT

21-06-2025 மற்றும் 22-06-2025: தமிழகம் மற்றும் புதுவையில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.

21-06-2025 மற்றும் 22-06-2025: அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம்.

சென்னை – வானிலை முன்னறிவிப்பு
வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. heatwave increase in tamilnadu

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share