தமிழ்நாட்டில் இன்று 15 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்து வெப்பம் பதிவாகி உள்ளது.
இந்தியா முழுவதும் வெப்ப அலை அதிகமாக இருக்கிறது. உத்தரப் பிரதேச மாநிலம் பந்தா பகுதியில் 117.68 பாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தை போன்று தமிழகத்திலும் வெயில் கடுமையாக உள்ளது. 15 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவாகியுள்ளது.
வேலூரில் 107, ஈரோடு 105.8, கரூர் பரமத்தி 105.8, மதுரை விமான நிலையத்தில் 104.7, திருத்தணி 101.8, கோவை, சேலம் 101.5, சென்னை 101 பாளையங்கோட்டை 100.8, மீனம்பாக்கம் 100.6, தஞ்சை 100.4 டிகிரி பாரன்ஹீட் பதிவாகி உள்ளது.
இந்நிலையில், “மத்திய மற்றும் வடமேற்கு இந்தியாவின் சில பகுதிகளில் இன்றும் வெப்ப அலை நீடிக்க வாய்ப்புள்ளது, இருப்பினும் விரைவில் படிப்படியாக இதிலிருந்து நிவாரணம் கிடைக்கும்” என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை, ஈரோடு, கரூர், மதுரை, திண்டுக்கல், வேலூர், திருப்பத்தூர் போன்ற உள் மாவட்டங்களில் வெப்பம் நீடிக்க வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மைய இயக்குநர் துரை கூறியுள்ளார்.










