அமெரிக்காவில் வீசிய வெப்ப அலையால் வாஷிங்டன் நகரத்தில் வைக்கப்பட்டிருந்த ஆப்ரகாம் லிங்கனின் மெழுகு சிலை உருகியது.
ஆப்ரகாம் லிங்கன்
அமெரிக்காவில் அடிமை முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதனை ஒழித்தவர்களில் தலையாயவர் ஆப்ரகாம் லிங்கன்.
1860ஆம் ஆண்டு மேற்கு மாநிலங்களில் தலைவராக இருந்த இவர் குடியரசுக் கட்சியின் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு அமெரிக்காவின் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று 16வது அதிபரானார்.
அவரை பெருமைப்படுத்தும் விதமாக வாஷிங்டன் நகரத்தின் வடமேற்கு பகுதியில் Garrison Elementary School பகுதியில் 6 அடி உயரத்தில் அமர்ந்த நிலையில் ஆப்ரகாம் லிங்கனின் மெழுகு சிலை வைக்கப்பட்டு இருந்தது.
ஜூன் 22ஆம் தேதி அமெரிக்காவின் வடமேற்கு வாஷிங்டன் பகுதியில் 37.7 டிகிரி செல்சியஸில் வெப்ப அலை வீசியது.
இதனால், ஆப்ரகாம் லிங்கனின் 6 அடி மெழுகு சிலை உருகியது.
இதுகுறித்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில், ஆப்ரகான் லிங்கனின் தலை மற்றும் வலது கால் பகுதி அதிக வெப்பத்தால் உருகி உள்ளதையும், கால்கள் அதன் உடற்பகுதியில் இருந்து பிரிக்கப்பட்டதையும் காண முடிகிறது.
இந்த திறந்தவெளி மெழுகு சிலையின் சேதமடைந்த பகுதிகள் தற்போது சீரமைக்கப்பட்டு வருகிறது.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…