அதிமுக மாஜி அமைச்சர்களுக்கு எதிரான வழக்கில் திங்கள்கிழமை விசாரணை

By Pandeeswari Gurusamy

|

Published on 18 Apr 2026, 12:51 PM

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு, வரும் திங்கட்கிழமை (ஏப்ரல் 20) அன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.

எல்இடி விளக்கு கொள்முதல் முறைகேடு மற்றும் சொத்துக்குவிப்பு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை சேகரித்த ஆவணங்களின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர்கள் மீது சட்டவிரோத பணப்பரிமாற்றச் சட்டம் (PMLA) கீழ் அமலாக்கத்துறை (ED) வழக்கு பதிய உத்தரவிடக் கோரி, திமுக எம்.பி. கிரிராஜன் கடந்த மார்ச் மாதம் மனு தாக்கல் செய்துள்ளார்.

ADVERTISEMENT

அதிமுக முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி. வேலுமணி, பி. தங்கமணி, சி. விஜயபாஸ்கர், கே.பி. அன்பழகன், கே.சி. வீரமணி, இளங்கோவன் மற்றும் முன்னாள் எம்எல்ஏ சத்யா ஆகியோர் மீது தனித்தனியாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்குகள், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் ஜி. அருள் முருகன் அமர்வில் வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு வர உள்ளன.

ADVERTISEMENT

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel