உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் உணவில் கவனம் செலுத்துவது போலவே எடுத்துக் கொள்ளும் ஸ்நாக்ஸிலும் அதிக அக்கறையுடன் இருக்க வேண்டும். டயட்டில் இருந்து கொண்டு சாட் உணவுகளை எடுத்து கொண்டால் எந்த ரிசல்ட்டும் கிடைக்காது. டயட்டில் இருக்கும் போது மாலை நேரத்தில் நிச்சயமாக பசி எடுக்கும். அப்போது டீ, காபி, பஜ்ஜி, வடை, பானிபூரி போன்ற ஸ்நாக்ஸ் வகைகளை எடுத்து கொள்வதற்கு பதில் ஆரோக்கியம் நிறைந்த ஸ்நாக்ஸ்களை மட்டுமே எடுத்து கொள்ளவும்.
கொண்டைக்கடலை
வேகவைத்த கொண்டைக்கடலை உடலுக்கு மிக மிக நல்லது. கொண்டைக்கடலை சாட்டில் புரதம் நிறைந்துள்ளது, இது எடை இழப்புக்கு ஏற்றது.
சக்கரவள்ளி கிழங்கு
மாலை நேரத்தில் சக்கரவள்ளி கிழங்கை வேக வைத்து சாப்பிட்டால் உடல் எடையை எளிதில் குறைக்கலாம்.
க்ரீன் டீ
டீ, காபி குடிக்கும் பழக்கம் கொண்டவர்கள் க்ரீன் டீ எடுத்து கொள்ளலாம்.பெண்களுக்கு க்ரீன் டீ தரும் நன்மைகள் ஏராளம். அதனுடன் சேர்த்து உடல் எடையை குறைக்க க்ரீன் டீ உதவுகிறது.
சாலட்
பழங்கள் மற்றும் காய்கறிகளை நறுக்கி அதில் எலுமிச்சை சாறு பிழிந்து சாலட்டாக சாப்பிடலாம். இது எடையை குறைக்க உதவும்.
விதைகள்
உடல் எடையை குறைக்க உதவும் விதைகளான, பூசணி விதை, ஆளி விதை, சூரிய காந்தி விதை ஆகியவற்றை வறுத்து சாப்பிடலாம். அல்லது வறுத்து பொடியாக்கியும் உட்கொள்ளலாம்.
சூப்
உடல் எடையை குறைக்க மாலை நேரத்தில் சூப் குடிப்பது மிகவும் பயன் தரும். காய்கறி சூப்களை குடிக்கலாம்.
பயிர்கள்
பயிர்களை ஈர துணியில் கட்டி வைத்து, முளைக்கட்டிய பயிர்களாக மாலை நேரத்தில் சாப்பிடலாம். உடல் எடை ஈஸியாக குறையும்.
வேர்க்கடலை
வேர்க்கடலையில் ஏகப்பட்ட சத்துக்கள் உள்ளன. இதை வேக வைத்து மாலை நேரத்தில் சாப்பிடலாம்.
சோளம்
உடல் எடையை குறைக்க மாலை நேரத்தில் வேக வைத்த சோளம் சாப்பிடலாம். இது பசியை கட்டுப்படுத்தும்.
சுபஶ்ரீ
வாட்ஸ் அப்பில் மின்னம்பலம் செய்திகளை படிக்க… இங்கே க்ளிக் செய்யவும்!
பாகிஸ்தான் விமான நிறுவனத்தை விற்க முடிவு!
வேலைவாய்ப்பு : உளவுத் துறையில் பணி!
வணிகப் பயன்பாட்டுக்கான மனைகள் மதிப்பு உயர்வு: விக்கிரமராஜா எதிர்ப்பு!