கிச்சன் கீர்த்தனா: ஹெல்த்தி மோர்

Published On:

| By admin

கோடைக்கேற்ற சிறந்த பானம் இந்த ஹெல்த்தி மோர். இதில் நுண்ணுட்டச்சத்துகள் அதிகம். மாரடைப்பு வராமல் தடுக்கும். உச்சி முதல் பாதம் வரை உள்ள அனைத்து செல்களுக்கும் புத்துயிர் கொடுக்கும். இதில் உள்ள தாது உப்புகள் மற்றும் புரோட்டீன், அமினோ அமிலங்கள், நோய் எதிர்ப்புக் காரணியாக விளங்கும். ரத்த அழுத்தத்தைக் குறைக்கும். பெண்களுக்கு மெனோபாஸ் நேரத்தில் வரும் பிரச்னைகளுக்கும் நல்ல தீர்வாகும். கெட்ட கொழுப்பைக் கரைக்கும்; நல்ல கொழுப்பை அதிகரிக்கும்.

என்ன தேவை?

  • நன்கு நீர்விட்டுக் கடைந்த மோர் – 200 மில்லி
  • தோலுடன் சேர்த்து அரைத்த வெள்ளரிக்காய்ச்சாறு – 50 மில்லி
  • சீரகத்தூள், ஆளிவிதைப் பொடி – தலா கால் டீஸ்பூன்
  • நறுக்கிய கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, புதினா கலவை – ஒரு டேபிள்ஸ்பூன்.

எப்படிச் செய்வது?

நீர் மோருடன் வெள்ளரிக்காய்ச்சாறு சேர்த்துக் கலக்கவும். அதனுடன் கொத்தமல்லித்தழை, புதினா, கறிவேப்பிலை, சீரகத்தூள், ஆளிவிதைப் பொடி சேர்த்துக் கலக்கவும். விருப்பப்பட்டால் அரை டீஸ்பூன் உப்பு சேர்க்கலாம். 100 மில்லி முதல் 200 மில்லி வரை காலை 11 மணி அளவிலும் அல்லது மாலை 4 மணி அளவிலும் பருகலாம்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share