வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமையான இன்று, வெயில் கொளுத்த தொடங்குவதற்கு முன்பே வீட்டிலிருந்து கிளம்பலாம் என்று நினைப்பவர்கள் காலை சிற்றுண்டியைத் தவிர்ப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் இந்த மல்டி வெஜிடபிள் சூப் செய்து சுவைக்கலாம். நாள் முழுக்க எனர்ஜியாகப் பணியாற்றலாம்.
என்ன தேவை?
மிகவும் பொடியாக நறுக்கிய கேரட், கோஸ், பீன்ஸ் (சேர்த்து) – ஒரு கப்
கொத்தமல்லித்தழை – ஒரு கட்டு
பச்சை மிளகாய் – ஒன்று
கார்ன்ஃப்ளார் (சோள மாவு) – 2 டீஸ்பூன்
மிளகுத்தூள், உப்பு – சிறிதளவு
எப்படிச் செய்வது?
கொத்தமல்லித்தழையை ஆய்ந்து, சுத்தம் செய்து பொடியாக நறுக்கவும். கார்ன்ஃப்ளாரை கொஞ்சம் நீரில் கரைத்துக் கொள்ளவும். அகலமான பாத்திரத்தில் நீரைக் கொதிக்க விட்டு, காய்கறிகள், கொத்தமல்லித்தழை, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வேகவிடவும். வெந்து ஆறியதும், மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். அதனுடன் சிறிதளவு நீர், கார்ன்ஃப்ளார் கரைசல், உப்பு சேர்த்து, அடுப்பில் வைத்து ஒரு கொதிவிட்டு இறக்கி, மிளகுத்தூள் தூவி பரிமாறவும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சண்டே ஸ்பெஷல்: டூர் செல்கிறீர்களா… உணவு விஷயத்தில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் இதோ!
ரோகித் சர்மா சதம் வீண்… சென்னைக்கு வெளியே முதல் வெற்றி பெற்ற சிஎஸ்கே!