பியூட்டி டிப்ஸ்: பொலிவற்ற கூந்தல், சருமம்: உண்ணும் உணவுகளின் மூலம் விரட்டலாம்!

Published On:

| By christopher

Healthy Foods for Skin and Hair

சிலருக்கு கூந்தலும் சருமமும் பொலிவின்றி இருக்கும். அதற்கு புரதச்சத்துக் குறைபாடு காரணமாக இருக்கலாம் என்று தாங்கள் கேட்டதை, படித்ததை வைத்து ஒரு முடிவுக்கு வருவார்கள்.

ஆனால், எத்தகைய உணவுகளின் மூலம் புரதச்சத்து கிடைக்கும் என்று தெரியாமல் தவிர்ப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் கீழ்க்கண்ட உணவுகளைச் சாப்பிட்டு பொலிவு பெறலாம்.

முட்டையில் புரதச்சத்து நிறைந்து காணப்படுகிறது, நன்றாக உடற்பயிற்சி செய்பவர்கள், தினமும் அதிகமாக உடல் உழைப்பு செய்பவர்கள் தினமும் ஒரு முட்டை சாப்பிடலாம். மற்றவர்கள் வாரம் மூன்று முட்டை சாப்பிடலாம்.

சிக்கன் போன்ற அசைவ உணவுகளில் புரதச்சத்து அதிகமாக இருக்கிறது. சிக்கனை எண்ணெயில் பொரித்து சாப்பிடக் கூடாது.

ஹார்மோன் ஊசிகள் ஏற்றப்படாத நல்ல நாட்டுக்கோழியை வாரம் 300 – 500 கிராம் அளவுக்கு நீராவியில் வேகவைத்து, மசாலா தடவாமல் சாப்பிடலாம். சிக்கன் சாலட் செய்தும் சாப்பிடலாம்.

துவரம் பருப்பு, பாசி பருப்பு என பருப்பு வகைகள் அனைத்திலும் புரதச்சத்து நிறைந்திருக்கிறது. முளைகட்டிய பயிர்களில் புரதச்சத்து அதிக அளவு உள்ளது. எனவே அசைவ உணவுகளைத் தவிர்ப்பவர்கள் தினமும் சிறிதளவு முளைகட்டிய பயிர்களை சமைத்து சாப்பிடலாம்.

‘யோகர்ட்’ எனப்படும் தயிர், சீஸ் போன்றவற்றில் புரதச்சத்து நிறைந்துள்ளது. எனினும் இதில் கொழுப்பு சத்தும் நிறைந்து காணப்படுவதால், இதை அளவாகவே உண்ண வேண்டும். பால் பொருட்களில் ஓரளவுக்கு புரதம் உள்ளது.

புரதச்சத்து குறைபாடு கொண்டவர்களுக்கு சோயா நல்ல மருந்து. சோயாவை அவ்வப்போது சீரான இடைவெளி விட்டு சமையலில் சேர்த்து சாப்பிட்டு வரலாம். சோயா பால், சோயா சீஸ் போன்றவற்றிலும்  புரதச்சத்து நிறைந்துள்ளது.

புரதச்சத்து நிறைந்த உணவுகளை எடுக்கும்போது கார்போஹைட்ரேட் குறைவாக உண்போம். அதன் விளைவாக உடல் எடை குறையும்.

அரிசி, கோதுமை உணவுகளை எடுக்கும்போது அதிகப்படியான கார்போஹைட்ரேட்டானது கொழுப்பாக உடலில் போய் சேரும். அதனால் எடை அதிகரிக்கும்.

அதுவே போதுமான புரோட்டீன் உள்ள உணவுகளைச் சாப்பிடும்போது கார்போஹைட்ரேட் உள்ள உணவுகளைக் குறைவாகச் சாப்பிடுவதால் தானாக உடல் எடை குறையும்.

தாவர உணவுகளில் இருந்து பெறப்படும் புரதச்சத்தை எடுப்பவர்கள், அசைவ உணவுகளிலிருந்து கிடைக்கும் புரதச்சத்தை எடுப்பவர்களை விடவும் நீண்ட ஆயுளோடு வாழ்வதாக சமீபத்திய ஆய்வுகள் சொல்கின்றன.

அசைவ உணவுகளான மீன், சிக்கன், முட்டை போன்றவற்றில் புரதச்சத்து அதிகம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல்…  நீங்கள் ஆரோக்கியமான உணவுகளைத்தான் சாப்பிடுகிறீர்களா?

தி கிரேட் எஸ்கேப்… அப்டேட் குமாரு

தாம்பரம் டூ ராமநாதபுரம்: சிறப்பு ரயில்கள் இயக்கம்!

டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர் எப்போது?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share