கிச்சன் கீர்த்தனா – குதிரைவாலி கிச்சடி

Published On:

| By Minnambalam

பள்ளிகள் திறந்து பிள்ளைகளின் பகல் உணவுக்கு என்ன செய்து கொடுத்து அனுப்பலாம் என்று யோசிப்பவர்கள், சத்தான சிறுதானிய உணவுகளைச் செய்து கொடுக்கலாம். அதற்கு இந்த குதிரைவாலி கிச்சடி பெஸ்ட் சாய்ஸ்.

என்ன தேவை?

குதிரைவாலி அரிசி – ஒரு கப்
காய்கறிக் கலவை (கேரட், பட்டாணி, உருளைக்கிழங்கு, பீன்ஸ்) – ஒரு கப்
வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்)
தக்காளி – ஒன்று (பொடியாக நறுக்கவும்)
பச்சை மிளகாய் – 4 (இரண்டாகக் கீறவும்)
இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்
நெய் – ஒரு டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

தாளிக்க…

பட்டை, லவங்கம் – 2
பிரியாணி இலை – 2
மராத்தி மொக்கு – ஒன்று
எண்ணெய் – தேவையான அளவு

எப்படிச் செய்வது?

குதிரைவாலி அரிசியை நன்றாகக் கழுவி, பத்து நிமிடங்கள் ஊறவைக்கவும். குக்கரில் எண்ணெய்விட்டுத் தாளிக்கக்கொடுத்துள்ள பொருள்களைத் தாளித்து, பச்சை மிளகாய், வெங்காயம், இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பிறகு தக்காளி, காய்கறிகள், உப்பு சேர்த்து வதக்கவும். அத்துடன் அரிசி, 2 கப் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி ஒரு விசில்விட்டு இறக்கவும். குக்கரில் ஆவி அடங்கிய பிறகு மூடியைத் திறந்து, நெய்விட்டுக் கிளறிச் சூடாகப் பரிமாறவும்.

எடைக்குறைப்புக்கு பழங்களும் சூப்பும் உதவுமா?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share