கொரோனாவைத் தடுப்பதற்கான மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படாமல் ஆராய்ச்சியில் உள்ள நிலையில் நோயை எதிர்க்கிற சக்தி மஞ்சள் பாலுக்கு உண்டு என்பதை நம் முன்னோர் எப்போதோ சொல்லியுள்ளனர்.
அது என்ன மஞ்சள் பால்? நாம் எப்போதும் அருந்தும் பாலில் சிறிதளவு மஞ்சள்தூள் கலந்தால் அதுவே மஞ்சள் பால்.
‘வெறும் பாலைக் குடிப்பதைவிட அதில் சிறிதளவு மஞ்சள் கலந்து குடிப்பது நல்லது’ என்று மருத்துவர்களும், வீட்டில் உள்ள பெரியவர்களும் அடிக்கடி சொல்லக் கேட்டிருப்போம். குறிப்பாக அவர்கள் சொன்னது இந்த கொரோனா காலத்துக்கு மிகப் பொருத்தமானது.
பாலைக் காய்ச்சும்போது சிறிதளவு மஞ்சள்தூள், மிளகுத்தூள் சேர்த்து லேசாகக் கொதிக்கவிட்டு அப்படியே குடிக்கலாம்.
மஞ்சளில் குர்குமின் என்ற வேதிப்பொருள் உள்ளது. இது சிறந்த கிருமிநாசினியாகச் செயல்படுகிறது. மஞ்சள் கலந்த பாலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருப்பதால், நுண்ணுயிரிகளால் ஏற்படும் நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது.
சளி, இருமல், தொண்டை கரகரப்பு போன்ற பிரச்சினைகளுக்கும் மஞ்சள் பால் அருமருந்தாகும்.
மஞ்சள் கலந்த பாலைக் குடிக்கும்போது, உடல் வெப்பம் அதிகரிக்கும். இதன் காரணமாக, நெஞ்சு சளி மற்றும் சைனஸ் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும்.
இதில் இருக்கும் சத்துகள் நம் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தில் உள்ள சைட்டோகைன் செல்களைத் தூண்டி நோய்க்கிருமிகளை எதிர்த்துப் போரிடச் செய்து, அந்தக் கிருமிகளால் ஏற்படும் நோய்களில் இருந்து நம்மைக் காக்கும்.
மஞ்சள் கலந்த பாலை தினமும் குடித்து வந்தால் சருமம் பொலிவு பெறும். ரத்த ஓட்டத்தைச் சீராக்கி, உடலுக்குப் புத்துணர்வைத் தரும்.
மாதவிடாய் காலங்களில் வரும் கடுமையான வயிற்றுவலியைக் குறைக்கவும் மஞ்சள் பால் உதவுகிறது. கர்ப்பிணிகளும் இதை எடுத்துக்கொள்ளலாம்.
பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் தினசரி உணவில் மஞ்சள் பாலைச் சேர்த்துக் கொள்ளலாம். இதனால் பக்கவிளைவுகள் எதுவும் ஏற்படாது.
தற்போதைய சூழ்நிலையில்தினமும் ஒரு வேளை மஞ்சள் பால் அருந்தலாம்.
**குறிப்பு**
கடைகளில் விற்பனை செய்யப்படும் பாக்கெட் மஞ்சள் தூளில் அதிகப்படியான ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன. கலப்பட மஞ்சளும் கடைகளில் ஏராளம். சித்த மருத்துவக் கடைகளில் மஞ்சள், கிழங்குகளாகக் கிடைக்கும் அல்லது மஞ்சள் சாகுபடி செய்வோரிடமிருந்தே மஞ்சள் கிழங்குகளை வாங்கி, வெயிலில் உலரவைத்து, அரைத்து மஞ்சள்தூளை வீட்டிலேயே தயார் செய்து பயன்படுத்துவது சிறந்தது.
[நேற்றைய ரெசிப்பி: ராகி கீரை வடை](https://minnambalam.com/k/2020/07/04/3)�,