nஇன்று 5,185 : கொரோனாவுக்கு இதுவரை 10,120 பேர் பலி!

Published On:

| By Balaji

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்பான இன்றைய நிலவரத்தை சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.

வெளிநாடு, வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் உள்பட இன்று (அக்டோபர் 9) ஒரே நாளில் 5,185 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,46,128 ஆக அதிகரித்துள்ளது. அதே சமயம் ஒன்று ஒரே நாளில் தமிழகம் முழுவதும் 5,357 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 5,91,811 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 44,197 ஆக இருக்கிறது. தமிழகத்தில் இன்று ஒரு நாளில் மட்டும் 97,087 மாதிரிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், இதுவரை 81.41 லட்சம் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது எனவும் சுகாதாரத் துறை செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. இன்று ஒரே நாளில் 68 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,120 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் மட்டும் இன்று 1,288 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,79,424 ஆக அதிகரித்துள்ளது. சென்னையை தவிர பிற மாவட்டங்களில் இன்று 3,793 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

**எழில்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share