wஇன்று 6,972: மாவட்டங்களில் அதிகரிக்கும் கொரோனா!

Published On:

| By Balaji

இன்று ஒரே நாளில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தை நெருங்கியது.

தமிழகத்தில் வரும் 31ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவுக்கு வர இருந்தாலும் கொரோனா பாதிப்பு என்பது தொடர்ந்து அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது. இந்த நிலையில் வெளிநாடு, வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் உள்பட தமிழகத்தில் இன்று (ஜூலை 28) ஒரே நாளில் 6,972 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தின் மொத்த பாதிப்பு 2,27,688 ஆக அதிகரித்துள்ளது.

இன்று மட்டும் 61,153 மாதிரிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது எனவும், இதுவரை 24,75,866 மாதிரிகளுக்கு சோதனை செய்துள்ளதாகவும் தமிழக சுகாதாரத் துறையின் அறிக்கை தெரிவிக்கிறது. இன்று 4,707 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதால், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,66,956 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 57,073 பேர் மட்டும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொற்றால் இன்று 88 பேரும், இதுவரை 3,659 பேரும் உயிரிழந்துள்ளனர்.

தலைநகர் சென்னையில் 1,107 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. செங்கல்பட்டு 365, கோவை 273, கடலூர் 142, திண்டுக்கல் 114, கள்ளக்குறிச்சி 195, காஞ்சிபுரம் 223, கன்னியாகுமரி 223, மதுரையில் 346, புதுக்கோட்டை 128, ராணிப்பேட்டை 198, சேலத்தில் 124 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுபோலவே, தஞ்சாவூர் 209, தேனி 283, திருவள்ளூர் 486, திருவண்ணாமலை 268, திருவாரூர் 132, தூத்துக்குடி 381, திருநெல்வேலி 387, திருச்சி 149, வேலூர் 151, விருதுநகரில் 577 என சென்னையைத் தவிர்த்த 21 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு மூன்று இலக்கங்களில் பதிவாகியுள்ளது.

**எழில்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share