தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,951 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இவர்களில் 14 பேர் வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள். இதனால் தமிழகம் முழுவதும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,91,303 ஆக அதிகரித்துள்ளது.
இன்று 6,998 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், இதுவரை பூரண நலம் பெற்றவர்களின் எண்ணிக்கை 3,32,454 ஆக அதிகரித்துள்ளது. தற்போது, மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 52, 128 ஆக உயர்ந்தது.
இன்று ஒரே நாளில் 70, 221 மாதிரிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருக்கும் சூழலில், இதுவரை 43,46,861 பேருக்கு பரிசோதனை நடந்துள்ளது. 63 அரசு, 78 தனியார் என 141 ஆய்வகங்கள் மூலமாக பரிசோதனை நிகழ்ந்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் 65 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 42 பேரும் என இன்று 107 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்தனர். இதனால் ஒட்டுமொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 6,721 ஆக உயர்ந்தது.
மாவட்டங்களைப் பொறுத்தவரை அதிகபட்சமாக சென்னையில் 1,270 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பிற மாவட்டங்களில் புதிதாக 4,681 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கடலூரில் 370 பேருக்கும், செங்கல்பட்டில் 321 பேருக்கும், கோவையில் 320 பேருக்கும், திருவள்ளூரில் 305 பேருக்கும் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
**எழில்**�,