இன்று 4,328: பலி எண்ணிக்கை 2032 ஆக உயர்வு!

Published On:

| By Balaji

தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2000 த்தைத் தாண்டியது.

தமிழகத்தில் வெளிநாடு, வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் உள்பட இன்று (ஜூலை 13) ஒரே நாளில் 4,328 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனால் தமிழகத்தின் ஒட்டுமொத்த பாதிப்பு 1,42,798 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இயங்கும் 105 பரிசோதனை நிலையங்கள் இயங்கி வருகின்றன. இதன்மூலம் இன்று 43,548 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், 15,85,782 பேருக்கு இதுவரை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்று 3,035 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து விடுபட்டு வீடு திரும்பியுள்ள நிலையில், இதுவரை 92,567 பேர் பூரண நலம்பெற்றுள்ளனர். தற்போது தமிழகம் முழுவதும் 48,196 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அரசு மருத்துவமனையில் 50, தனியார் மருத்துவமனையில் 16 பேர் என இன்று மட்டும் 66 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தின் ஒட்டுமொத்த பலி எண்ணிக்கை 2,032 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் படிப்படியாக பாதிப்பு குறையும் நிலையில் இன்று 1140 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது, 24 பேர் உயிரிழந்துள்ளனர். அதே சமயம் 2079 பேர் பூரண நலம்பெற்று வீடு திரும்பியுள்ளனர்.

ஆனால், பிற மாவட்டங்களில் கொரோனா பரவல் கணிசமாக அதிகரித்துள்ளது. மதுரையில் 464, காஞ்சிபுரத்தில் 352, திருவள்ளூரில் 337, செங்கல்பட்டில் 219, கன்னியாகுமரியில் 185, தேனியில் 134 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல தூத்துக்குடியில் 122, திருநெல்வேலியில் 118, வேலூரில் 129, விழுப்புரத்தில் 143, ராணிப்பேட்டையில் 126, சேலத்தில் 101 பேருக்கும் கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது.

**எழில்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share