கொரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6,420 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று (ஆகஸ்ட் 22) 5,980 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இவர்களில் 23 பேர் வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்கள். இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,73,410 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 5,603 பேர் ஒரே நாளில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3,13,280 ஆக உயர்ந்துள்ளது.தற்போது, 53,710 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்று ஒரேநாளில் 73,547 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இதுவரை மொத்தம் 41,36,490 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.கொரோனாவால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 57 பேரும், தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 23 பேரும் என இன்று ஒரே நாளில் 80 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து, கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6,420 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் மேலும் 1,294 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 4,686 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மொத்த பாதிப்பு 1.24 லட்சம் என்ற அளவில் உள்ளது.
*எழில்*�,