தமிழகத்தில் கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தைத் தாண்டியது.
தமிழகத்தில் இன்று (ஆகஸ்ட் 21) ஒரே நாளில் 5,995 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளதாக சுகாதாரத் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் தமிழகத்தில் மட்டும் 5963 பேருக்கும், வெளிமாநிலம், வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் 32 பேருக்கும் பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,67,430 ஆக அதிகரித்துள்ளது.
அரசு மற்றும் தனியாரிலுள்ள 139 ஆய்வகங்கள் மூலம் இன்று மட்டும் 74,344 மாதிரிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை 40,62, 943 மாதிரிகளுக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று கொரோனாவிலிருந்து குணமடைந்த 5,764 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால் பூரண நலம் பெற்றவர்களின் எண்ணிக்கை 3,07,677 ஆக அதிகரித்துள்ளது. தற்போது, 53,413 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Today/Total – 5,995 / 3,67,430
Active – 53,413
Discharged Today/Total – 5,764 / 3,07,677
Death Today/Total – 101 / 6,340
Samples Tested Today/Total – 74,344 / 40,62,943
For more info visit https://t.co/YJxHMQexUK@CMOTamilNadu @Vijayabaskarofl @MoHFW_INDIA— National Health Mission – Tamil Nadu (@NHM_TN) August 21, 2020
அரசு மருத்துவமனைகளில் 65 பேர், தனியார் மருத்துவமனைகளில் 36 பேர் என இன்று மட்டும் கொரோனா பாதித்த 101 பேர் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 6,340 ஆக உயர்ந்தது. அதிகபட்சமாக சென்னையில் இன்று 1,282 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு 1,22,757 ஆக அதிகரித்துள்ளது. பிற மாவட்டங்களில் இன்று 4,713 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
**எழில்**
�,”