Gரிலாக்ஸ் டைம்: சோளக் கஞ்சி!

Published On:

| By Balaji

வெள்ளை சோளத்தை ஆங்கிலத்தில் Great millet (கிரேட் மில்லட்) என்று அழைப்பார்கள். பெயருக்கேற்றபடியே சிறுதானியங்களில் சிறப்பான இடம் உண்டு இதற்கு. வெள்ளைச் சோளத்தில் செய்யப்படும் இந்த கஞ்சியில் உள்ள சத்துகள் உடலை கவசம் போல் காக்கும். ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.

**எப்படிச் செய்வது?**

ஒரு கப் வெள்ளைச்சோளத்தை ஐந்து மணி நேரம் ஊறவைத்து, நன்கு அரைத்து லேசாகப் புளிக்கவிட்டு எடுத்தால் கஞ்சி தயாரிப்பதற்குத் தேவையான மாவு தயார். ஒரு கப் மாவுக்கு ஏழு முதல் எட்டு கப் தண்ணீர்விட்டு, கால் டீஸ்பூன் சீரகம் சேர்த்து நன்கு வேகும் வரை காய்ச்சி, அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிது ஆறியதும் அதில் 200 மில்லி மோர் கலந்து குடிக்கலாம்.

**சிறப்பு**

இதில் நார்ச்சத்து அதிகம். இது நீரிழிவைக் கட்டுப்படுத்தும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும். எலும்புகளை வலுப்படுத்தும்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment