இன்றைக்கு அமெரிக்கர்களின் அடிப்படை உணவுகளில் ஒன்றாக இருக்கும் சாலட், அங்கே அறிமுகமானது 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில்தான். அறிமுகமான வேகத்திலேயே அமெரிக்கர்களின் தினசரி உணவுகளில் சாலட் இடம்பிடித்தது. சீனா, ஜப்பான், ஆஸ்திரேலியா, இந்தியா போன்ற பல நாடுகளில் சாலட், மேற்கத்திய கலாசார உணவாக அறிமுகமானது 20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில்தான். கலோரி ரொம்பக் குறைவு என்பதால், டயட் மெனுவில் இது முக்கிய உணவாக இருக்கிறது. நீங்களும் ரிலாக்ஸ் டைமில் இந்த டயட் சாலட் செய்து சாப்பிட்டுப் புத்துணர்ச்சி பெறலாம்.
**எப்படிச் செய்வது?**
ஒன்றரை கப் அளவுக்கு நறுக்கிய பீன்ஸ், கேரட், காலிஃப்ளவர், முள்ளங்கி கலவை அரை வேக்காடு பதத்துக்கு வேகவிட்டு எடுக்கவும். பொடியாக நறுக்கிய தக்காளி, வெள்ளரி, குடமிளகாய் அனைத்தும் சேர்த்து ஒரு கப் எடுத்துக் கொள்ளவும். காய்கள் அனைத்தையும் பெரிய பவுலில் போட்டு தேவையான அளவு உப்பு, அரை டீஸ்பூன் மிளகுத்தூள், இரண்டு டீஸ்பூன் எலுமிச்சைச்சாறு சேர்த்து இரண்டு டீஸ்பூன் ஆலிவ் ஆயில் விட்டு நன்கு கிளறவும். சிறிதளவு மல்லித்தழையை மேலாகத் தூவி பரிமாறவும்.
**சிறப்பு**
டயட்டில் இருப்பவர்கள் இதைச் சாப்பிட்டால் மூன்று மணி நேரம் பசி தாங்கும். இது, வாய்வுத் தொல்லையைத் தடுக்கும்; ஜீரணச் சக்தியை அதிகரிக்கும்.�,