yகிச்சன் கீர்த்தனா: ஒடிசா ஸ்பெஷல் – பொதொல் ரசா!

Published On:

| By Balaji

அந்த ஊருக்கான காய்கறிகள், பழங்கள் மற்றும் வாசனை திரவியங்கள் மட்டுமே பயன்படுத்தப்படும் ஒடிசாவில் சேப்பங்கிழங்கு, வாழைக்காய் போன்ற நாட்டுக் காய்கறிகளை அதிகம் பயன்படுத்துகிறார்கள். சீசனுக்கேற்ப இந்த மெனு மாறும். வெள்ளரிக்காய் போன்று இருக்கும் பர்வல் காயை அங்கு அதிகம் பயன்படுத்துகிறார்கள். அதைக் கொண்டு செய்யப்படும் உணவு இந்த பொதொல் ரசா.

**என்ன தேவை?**

பர்வல் (கம்பு புடலை – வட்டங்களாக நறுக்கியது) – ஒரு கப் (பெரிய காய்கறிக் கடைகளில் கிடைக்கும்)

நெய் – 2 டேபிள்ஸ்பூன்

உப்பு – ஒரு டீஸ்பூன்

மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்

மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்

தேங்காய்ப்பால் (கெட்டியானது) – ஒரு கப்

**எப்படிச் செய்வது?**

கடாயைச் சூடாக்கி நெய்யைச் சேர்க்கவும். பர்வல் துண்டுகளை நன்றாகப் பொரிக்கவும். உப்பு, மஞ்சள்தூள் மற்றும் மிளகாய்த்தூள் போட்டுக் கலக்கவும். தேங்காய்ப்பாலைச் சேர்த்து நிதானமான தீயில் வேகவிடவும். நான்கைந்து நிமிடங்களில் தயாராகிவிடும்.

[நேற்றைய ஸ்பெஷல்: ஆரோக்கியத்துக்கு அஸ்திவாரமிடுங்கள்!](https://minnambalam.com/entertainment/2020/10/11/1/kitchen-keerththana)�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share