இப்போதுள்ள ஈரப்பதமான சூழ்நிலையில் நோய் எதிர்ப்பு சக்தியை வளர்ப்பதற்குக் கீரை உணவுகள் அதிகம் உட்கொள்வது நல்லது. அதிலும் மணத்தக்காளிக்கீரை மிகவும் உகந்தது. ரிலாக்ஸ் டைமுக்கு உதவும் இந்த சூப், ஆரோக்கியத்தை மேம்படுத்தும். உடனடி புத்துணர்ச்சி தரும்.
எப்படிச் செய்வது?
செய்முறை: 25 கிராம் பாசிப்பருப்பை வேகவைத்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் சிறிய துண்டு பட்டை, சிறிதளவு பிரிஞ்சி இலை, சிறிதளவு சோம்பு தாளித்து, நறுக்கிய வெங்காயம் ஒன்று, தக்காளி இரண்டு, பச்சை மிளகாய் நான்கு, மணத்தக்காளிக்கீரை ஒரு கப் சேர்த்து வதக்கவும். அத்துடன் பருப்பைச் சேர்த்து தேவைக்கேற்ப தண்ணீர்விட்டு அரை டீஸ்பூன் சீரகத்தூள், அரை டீஸ்பூன் சோம்புத்தூள், அரை டீஸ்பூன் மஞ்சள்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து வேகவிடவும். கீரை வெந்ததும் இறக்கவும்.
சிறப்பு
வயிற்றுப்புண் வந்த பிறகு மணத்தக்காளிக்கீரையைச் சாப்பிடுவதைக் காட்டிலும் அடிக்கடி இந்த சூப்பைச் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்புண் பிரச்சினை எப்போதுமே நம்மை அண்டாது. வளரும் குழந்தைகள் மற்றும் இளம்பருவத்தினர், கருவுற்றிருக்கும் பெண்கள், நடுத்தர வயதுடையவர்கள் என அனைவரும் சாப்பிடுவதற்கேற்ற உணவாக இந்த சூப் அமையும்.�,