Pகிச்சன் கீர்த்தனா: பூசணி சூப்!

Published On:

| By Balaji

அறிவியல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி காய்கறிகளை அளவில் பெரிதாக உற்பத்தி செய்வது உலகமெங்கும் பரவலாகியுள்ளது. இந்தப் பட்டியலில் முதலிடம் பிடிப்பது பூசணி. இந்த காயின் வெளிர் ஆரஞ்சு நிறம் பீட்டா கரோட்டீன் கொண்டது. மேலும் நம் உடலுக்குத் தேவைப்படும் வைட்டமின் ஏ நிறைந்தது. காலை நேரத்தில் இந்தப் பூசணியை வைத்து சூப் செய்து அருந்துங்கள். நாள் முழுக்க புத்துணர்ச்சியைப் பெறுவீர்கள்.

**என்ன தேவை?**

பூசணித்துண்டுகள் – ஒரு கப்

நறுக்கிய வெங்காயம் – ஒன்று

இஞ்சி – ஒரு துண்டு

நறுக்கிய கேரட் – கால் கப்

உப்பு, மிளகுத்தூள், எண்ணெய் – தேவையான அளவு

**எப்படிச் செய்வது?**

ஒரு வாணலியில் தேவையான எண்ணெய்விட்டு சூடாக்கி அதில் நறுக்கிய வெங்காயம், இஞ்சி சேர்த்து வதக்கவும், அதனுடன் நறுக்கிய கேரட், பூசணித்துண்டுகள் சேர்த்து வதக்கி தேவையான தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும். கலவை நன்கு வெந்தவுடன் கீழே இறக்கி சிறிது சூடு ஆறிய பிறகு விழுதாக அரைக்கவும். அதில் உப்பு, மிளகுத்தூள் சேர்த்துப் பரிமாறவும்.

[நேற்றைய ஸ்பெஷல்: மாவு ஒண்ணு, பலகாரம் மூணு](https://minnambalam.com/k/2020/06/14/3)�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share